Monday, March 30, 2009

535. ஈழத்தமிழருக்காக கண்ணீர் விடும் அருந்ததி ராய்

இது வரை, ஒரு கடுங்குளிர்காலத்து பனிக்கரடி போல, கும்பகர்ணன் போல, ஆழ்ந்த யோக நித்திரையில் இருந்த, உலகின் நெம்பர் 1 லிபரலும், நெம்பர் 1 மனிதநேயவாதியும் ஆன நமது அருந்ததி ராய், திடீரென்று "அருந்ததீ" ராயாக உருவெடுத்து, மிச்சம் மீதியிருக்கும் ஈழத்தமிழருக்காக பொங்கியெழுந்து தன் வேதனையைக் கொட்டி ஒரு கண்ணீர் காவியம் படைத்திருக்கிறார், இன்றைய "டைம்ஸ்ஆஃப் இண்டியா" நாளிதழில் !!!

ஈழத்தமிழர் அனுபவிக்கும் சொல்லவொண்ணாத் துயரங்களையும், பெரிய அளவிலான உயிரிழப்பையும் பற்றி அருந்ததி எழுதியிருப்பது கண்டு, மனது பதைபதைத்து போய் விட்டது! "தீவிரவாத"ப்புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை ராணுவம் ஏராளமான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பது பற்றி அருந்ததி கட்டுரை வாயிலாக அறிந்து கொண்டபோது, மேலும் வாசிக்க முடியாமல் கண்களில் நீர் திரையிட்டது!!

நீங்களும் அந்தக் கட்டுரையை தயவு செய்து ......................................................................................
...................................................................................
...............................................................................
வாசிக்க வேண்டாம்...


அடச்சே, வந்துட்டாங்க பதினாறாம் நாள் சடங்கு செய்வதற்கு :-(
************************************************

அருந்ததி ராய் மீது மதிப்பு வைத்திருக்கும் ரோசா வசந்த்தே அவர் மேல் பயங்கரக் கடுப்பில் இருப்பது அந்த டைம்ஸ் கட்டுரையில் ரோசா இட்ட பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது!! கட்டுரையின் முடிவில், ரோசாவின் கமெண்ட்டைப் பார்க்கலாம்...

--- எ.அ.பாலா
*********************************************

The silent horror of the war in Sri Lanka
--- Arundhati Roy


The horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of serious concern.

From the little information that is filtering through it looks as though the Sri Lankan government is using the propaganda of the ‘war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.

Meanwhile, there are official reports that several ‘‘welfare villages’’ have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (Feb 14, 2009), these villages ‘‘will be compulsory holding centres for all civilians fleeing the fighting’’. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph:
‘‘A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.’’

Given its stated objective of ‘‘wiping out’’ the LTTE, this malevolent collapse of civilians and ‘‘terrorists’’ does seem to signal that the government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades-long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.

Why the silence? In another interview Mangala Samaraveera says, ‘‘A free media is virtually non-existent in Sri Lanka today.’’

Samaraveera goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society ‘‘freeze with fear’’. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.

There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?

In Tamil Nadu the war in Sri Lanka has fuelled passions that have led to more than 10 people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.

It is extraordinary that this concern has not travelled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’ — at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war. So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.

It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.
(It is already too late, Ms.Arundhati Roy. Anyway, Thanks for your generosity and Kindness !!!)
*********************************

அருந்ததியின் கட்டுரைக்கு ரோசா வசந்த்தின் பின்னூட்டம்:

Rosavasanth,Chennai,says:I am not able to complete reading this article yet, due to mixed emotions. Even if one is a refugee, one has to be lucky enough to be a Palestine refugee, thanks to the racial prejudice of Roy kind of writers also. What is happening in Srilanka is one of worst human tragedy in this century, worst form of state terrorism which is completely unreported. On the other hand the propaganda of the Srilankan govt is so powerful that even Chomsky is manipulated in his recent interview. So Srilankan Tamils are worser than any victims of war in the world, begging for some body to start talking for them, from the non tamil diaspora. So tamils are in a vulgar position to welcome this article of Arundhati which is filled with dishonesty. I am sure this article will be republished in blogs and other forums. If Arundhati is honest, she should be first apologizing to all Srilanka tamil people, for not writing about this, for not even knowing about it, for holding a racial prejudice about some thing which is happening few hundred kms away from her. She has to accept the hippocrasy of writing about Gaza, when she refused to talk about some thing worse than Gaza. I heard (though I am not sure) when the Tamil literary writers approached Arundhati to make a statement on Srilankan issue, she refused saying `please don't disturb'. Having gone through the torture of knowing what is happening in eelam, and living with anger and frustration of the silence from Roy kind of writers for the last few months, I am not able to welcome this article.

***************************

Sunday, March 29, 2009

534. சென்னையில் கலாச்சாரக் காவலர்களின் அராஜகம்

சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்ற இரு இளம்பெண்களை, (ஆஷாதீப் என்கிற) எக்மோரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் அசோசியேஷன் தலைவரும், இன்னும் சிலரும், "கலாச்சார"க் காவலராக அவதாரமெடுத்து அடித்து உதைத்துள்ளதை செய்தியில் வாசித்தபோது அதிர்ச்சியாக இருந்தது!

கோகுல் (மாணவர்), விஷால் (BPO-வில் பணி புரிபவர்) என்ற இளைஞர்கள் தங்கியிருந்த ஃபிளாட்டுக்கு, அப்பெண்கள் வியாழன் காலை சென்று, ஒரு அரைமணி நேரம் கழித்து, கதவைத் தட்டிய இந்த கலாச்சார காவல் கனவான்கள், அப்பெண்களை ஆபாசமாகத் திட்டியதோடு, அப்பெண்களை உடனடியாக வெளியேறுமாறு (இல்லையேல் போலீசைக் கூப்பிடப் போவதாகவும்?!) மிரட்டியுள்ளனர். பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாத அவ்விளைஞர்கள், அப்பெண்களை பத்திரமாக அனுப்பி விட நினைத்தனர்.

இதற்குள் ஃபிளாட்டின் வாசலில் ஒரு சிறு கூட்டம் சேர்ந்து விட, அசோசியேஷன் தலைவரும், இன்னும் சில அடிபொடிகளும் அப்பெண்களை வழிமறித்து செல்ல விடாமல் தடுத்ததோடு, அவர்களை தள்ளிவிட்டு, ஆபாசமான செய்கைகளை செய்திருக்கின்றனர். பலபேர் முன்னிலையில், அசிங்கமாகவும் திட்டியிருக்கிறார்கள்!

இரு பெண்களில் சற்று தைரியமானவர், அந்த அசோசியேஷன் தலைவரை கண்ணியமாக நடந்து கொள்ளும்படி கூறியதற்கு, அவரது மனைவி, அப்பெண்ணின் கையை பிடித்து முறுக்கியுள்ளார் (பெண்ணுக்கு பெண் தான் எதிரி போலும்!). அந்த கும்பலில் ஒரு நல்ல பெண்மணி இருந்ததால், எந்த ஆபத்தும் இல்லாமல், அவ்விரு பெண்களும் அங்கிருந்து செல்ல முடிந்தது.

இது நடந்த பின்னர், தான் செய்ததை மறைக்க வேண்டி, அசோசியேஷன் தலைவர் (கோகுல்,விஷால் தங்கியிருந்த ஃபிளாட்டில்) சந்தேகத்துக்குரிய செயல்கள் நடப்பதாக எக்மோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவ்விளைஞர்கள் காவல நிலையத்திற்கு அழைக்கப்பட்டதில், சில நாட்களில் தாங்கள் ஃபிளாட்டை காலி செய்து விடுவதாகவும், அதுவரை விருந்தினர் யாரும் வராதவாறு பார்த்துக் கொள்வதாகவும் எழுதிக் கொடுக்க வேண்டியிருந்தது. என்ன கொடுமை, பாருங்கள் !?!?! இளைஞர்கள் தங்கியிருக்கும் ஃபிளாட்டின் உரிமையாளருக்கும் இந்த சங்கதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது இன்னொரு கொடுமை! ஆனால், மற்ற ஃபிளாட் உரிமையாளர்கள் கொடுத்த பிரஷரில், அவர் இவ்விளைஞர்களை ஃபிளாட்டை காலி செய்து விடும்படி கூறியிருக்கிறார்!

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அண்ணன் (சந்தோஷ்), அந்த அசோசியேஷன் தலைவர் தான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்காவிடில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியுள்ளார். அப்பெண்களும், தவறு செய்தவர்கள் தகுந்த தண்டனை பெற ஆவன செய்யப்போவதாக தைரியமாக பேசியிருப்பது, மற்ற பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஒருவர் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கும், அப்பெண்களை ஆபாசமாகத் திட்டியதற்கும், தள்ளி விட்டதற்கும், சட்டத்தைக் கையில் எடுக்க முயன்ற அடாவடித்தனத்திற்கும், காரணமானவருக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கலாச்சார பாதுகாப்பு என்ற பெயரில், பெண்கள் மேல் செலுத்தப்படும் இது போன்ற வன்முறைச் செயல்கள் பெருகி வருவது சமூகச்சூழலின் சீர்கேட்டை சுட்டிக்காட்டுகிறது. இது தனிமனிதச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலும் கூட!

அந்த அசோசியேஷன் தலைவருக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில், முதலில் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதை விடுத்து, அப்பெண்களிடம் அராஜகமாக நடந்து கொண்டது கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த self appointed கலாச்சாரக் காவலரின் வீட்டுப் பெண்களை நினைத்தால் சற்று பரிதாபமாக இருக்கிறது (அல்லது) இவர்களின் moral policing வீட்டுக்கு வெளியில் மட்டும் தானா ???

மங்களூரில் ராமசேனா குண்டர்கள் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைகளுக்கு சிறிதும் குறையாதது இது :-( சென்னையில் ஆரம்பித்துள்ள இந்த moral policing செயல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், பல "கலாச்சாரக் காவலர்கள்" உருவாகி சட்டத்தைக் கையில் எடுக்க முற்படுவார்கள்


சென்னையில் வாழ்ந்து வரும் பிரபல ஃபேஷன் டிசைனர் ரெஹானே, இந்த விஷயத்தை அழகாக summarize செய்துள்ளார்!

I sometimes feel sad for these self-appointed custodians of morality. They need to get a life, lighten up and find a occupation. Otherwise, they'll only belong to the party pooper ranks

எ.அ.பாலா

நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா, இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள்

Thursday, March 26, 2009

533. தமிழில் அர்ச்சனை :-)

இன்று மெயிலில் ஒரு மேட்டர் வந்தது, "தமிழில் அர்ச்சனை" என்ற தலைப்பில். அனுப்பியவரின் ஐடி சற்று வித்தியாசமாக இருந்தது, "EXPLAIN Islam" !! ஆனால் மேட்டர் இஸ்லாம் பற்றி கிடையாது. "தமிழில் அர்ச்சனை" என்ற பெயரில் போலி "பகுத்தறிவு" வியாதிகளுக்கு அர்ச்சனை :-) வாசிக்க சுவாரசியமாக, சிந்தனையை தூண்டும் விதத்தில் (!) இருந்தது. ஆகவே, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :-)

எ.அ.பாலா

***********************************************

கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக் கொள்ளும் போலிப் பகுத்தறிவுவாதிகள் இன்னொரு புறம் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.

கடவுள் இல்லை என்றால் அதற்கு அர்ச்சனை செய்வதை எந்த மொழியில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். அர்ச்சனை செய்து மூடர்களாக ஆகாதீர்கள் என்று கூறி மக்களை விழிப்படையச் செய்திருக்க வேண்டும்.

நேர்மையான சமரசம் செய்து கொள்ளாத பகுத்தறிவு இப்படித்தான் தீர்ப்பளிக்கும்.

தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கூறுவதும் அதை வர வேற்பதும் எந்த வகையில் பகுத்தறிவு சார்ந்ததாகும்?

இதற்கு போலிப் பகுத்தறிவுவாதிகள் கூறுகின்ற காரணங்கள் யாவும் பகுத்தறி வுக்கு வெளியே நின்று கொண்டு கூறுகின்ற காரணங்களாகவே உள்ளன.

பகுத்தறிவுக்கு இது ஒவ்வாத செயல் தான்! பார்ப்பனரைப் பழி தீர்க்க இது அவசியம் என்று கூறுவார்களானால் இந்த வகையில் இவர்களும் மதவாதிகளைப் போல்தானே நடக்கின்றனர்?

இன உணர்வு, பழிவாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில், இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது அனைத்து மூட நம்பிக்கைகளையும் மிஞ்சிய மூட நம்பிக்கையல்லவா?

இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது பகுத்தறிவுக்கு அல்லது அறிவியலுக்கு உட்பட்டதுதான் என்பதை நிரூபிக்க போலிப் பகுத்தறிவுவாதிகள் தயாரா என்று அறைகூவல் விடுக்கிறோம்.

கடவுளின் பெயரால் பண விரயம் இல்லாத கடவுளை உருவாக்கிக் கொள்வதுடன் கடவுளுக்காக அபிஷேகம் என்ற பெயரில் பொருட்களைப் பாழாக்கலாமா என்று மேடை போட்டு போலிப் பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சாரத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்ததால் இதை முஸ்லிம்களாகிய நாமும் வரவேற்போம். ஆனால் எதைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்று இவர்கள் சித்தரித்தார்களோ அதுபோன்ற காரியங்களை இவர்களே செய்தும் வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் நடத்தும் விடு தலை 05 08 2008 நாளேட்டில் படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

'புதுச்சேரியில் பஞ்ச முக ஆஞ்சனேயருக்கு 1001 லிட்டர் பாலை அபிஷேகம் செய்து பாலை வீணாக்கியுள்ளனர். எத்தனையோ குழந்தைகள் சத்துணவுக் குறைவாலும் பசியாலும் அவதியுறும் போது இப்படி பாலை வீணாக்கலாமா' என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். நல்ல கேள்விகள்தான். ஆனால் அதற்கு மறுநாள் வெளியான விடுதலை நாளேட்டில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.

சைதை பகுதியில் பெரியார் சிலை நிறுவ தி.க.வினர் முடிவு செய்துள்ளார்களாம். அதற்கு முதல் கட்டமாக, எம்.பி. பாலு என்பவர் பத்தாயிரம் ரூபாய் அவரது குடும்பத்தினர் பதினைந்தாயிரம் ரூபாய், மதியழகன் பத்தாயிரம், அவரது குடும் பத்தார் ஐயாயிரம், தென்றல் பத்தாயிரம், அவரது குடும்பத்தினர் ஐயாயிரம், பத்ம நாபன் ஐயாயிரம், இரவி ஆயிரம் பிரபாகரன் ஆயிரம் என நிதி வழங்கினார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதெல்லாம் ஆரம்ப கட்டமாகத் திரட்டப்பட்ட நிதியாம். புதுச்சேரியில் 1001 லிட்டர் பால் அபிஷேகம் செய்தார்கள் என்றால் 500 லிட்டர் பாலுடன் 500 லிட்டர் தண்ணீர் கலந்துதான் அபிஷேகம் செய்திருப்பார்கள். கறந்த பாலை அப்படியே அபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள்.

ஒரு லிட்டர் பால் பதினெட்டு ரூபாய் என்ற கணக்கின்படி 500 லிட்டர் பால் ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும். தண்ணீர் இல்லாத பால் என்றால்கூட 1000 லிட்ட ருக்கு பதினெட்டாயிரம் ரூபாய்தான் ஆகும்.

இந்த பதினெட்டாயிரம் ரூபாயை நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் ஐந்தும் பத்துமாகத் திரட்டியிருப்பார்கள். ஒவ்வொரு பக்தனும் நூறு இருநூறு ரூபாய் பணத்தை வீணாக்கியிருப்பான்.

ஆனால் மூட நம்பிக்கையின் முதல் அடையாளமான ஒரு கற்சிலையை நிறுவ ஒரு குடும்பமே 25 ஆயிரம் (பதினைந் தாயிரம், பத்தாயிரம்) என்று கொடுக்கும் அளவுக்கு பயங்கர சிந்தனையாளர்களாக இருக்கிறார்களே? இந்தப் பகுத்தறிவைக் கண்டு புல்லரிக்கிறது போங்கள்!

பாலுக்காக செலவிட்ட பணத்தை மட்டும்தான் ஏழைக் குழந்தைகளின் உணவுக்கு செலவிட முடியுமா? கல்லுக்காக செலவிட்ட பல்லாயிரம் ரூபாய்களைக் கொண்டு வறுமையை விரட்டியிருக்கலாமே! ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்கியிருக்கலாமே!

அதுகூட மதவாதிகளுக்குத்தான் சாத்தியமாகும். அக்மார்க் பகுத்தறிவுவாதிகள் ஏழைக் குழந்தைகளுக்கு தான தர்மம் செய்யக் கூடாது என்றுதான் இவர்களின் ஆசான் பெரியார் இவர்களுக்குப் போதித்துள்ளார்.

ஆகவே தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும் பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன் - குடியரசு 21 4 1945 இதழில் பெரியார்.

கல்லுக்கு அபிஷேகம் செய்தால் அதுவும் மூட நம்பிக்கையாகி விடுகிறது. அந்தப் பாலை ஏழைகளுக்குத் தர்மம் செய்தால் அதுவும் உங்கள் தந்தையின் பார்வையில் அயோக்கியத்தனமாக ஆகி விடுகின்றது. இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானது?

இவர்களால் விமர்சிக்கப்படும் மதவாதிகளாவது கற்சிலைகளுக்கு பாலை அபி ஷேகம் செய்வதற்கு ஒருபுறம் பணத்தை வீணாக்கினாலும் ஏழைக் குழந்தைகளுக்காகவும் தங்கள் நிதியாதாரத்தை செல விட்டு வருகின்றனர்.

ஆனால் அக்மார்க் பகுத்தறிவாளர்கள் சிலைக்கு மட்டும்தான் செலவு செய்வார்கள். ஏழை எளிய மக்களுக்கு தர்மம் செய்து அயோக்கியர்களாக மாட்டார்கள்.

மக்களுக்கு உதவாத இந்தப் பகுத்தறிவை விட மக்களுக்கு கருணை காட்டும் அந்த மதவாதிகள் ஆயிரம் மடங்கு சிறந்து விளங்குகிறார்கள்.

பெரியார் பிறந்த (நாளாக இவர்கள் கூறும்) நாட்களின்போதும் இறந்த நாளின் போதும் அவரது சிலைக்காக ராட்சத மலர் மாலைகள் நூற்றுக்கணக்கில் போடப்படுகிறதே! இதற்கு ஆகும் செலவு பாலாபி ஷேகத்திற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகமாக உள்ளதே!

பொருளாதாரத்தை நாசமாக்கலாமா என்று நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளையும் அதைவிட வலிமையாக இந்து மதவாதிகள் உங்களை நோக்கி கேட்க முடியுமே?

மற்றவர்களை நோக்கி நீங்கள் எழுப்பும் கேள்விகள் மட்டும் அறிவுப்பூர்வமாக இருந்தால் போதுமா? அவர்கள் உங்களை நோக்கி அதே கேள்விகளைக் கேட்கும் நிலைமையில் நீங்கள் இருக்கக் கூடாது என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை?

போலிப் பகுத்தறிவுவாதிகளான உங்களைப் பொருத்தவரை மற்ற எவரையும் விமர்சனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து, முதலில் உங்கள் நடவடிக்கைகளைச் சரி செய்யும் வழியைப் பாருங்கள்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்....
***********************************************

Thursday, March 19, 2009

532. போலீஸ் உயரதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் : மோதல் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்ரமணியை, "சஸ்பெண்ட்' செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. "கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட வக்கீல்களுக்கு உரிமையில்லை, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 19ம் தேதி சென்னையில் வக்கீல்கள், போலீசாரிடையே பெரும் மோதல் வெடித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில், சுப்ரீம் கோர்ட் கமிட்டி அமைத்தது. சம்பவத்திற்கு வக்கீல்களும், போலீசாரும் காரணமென அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கை பற்றி வக்கீல்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டே விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஏற்கனவே, நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், சந்துரு அடங்கிய "பெஞ்ச்' இச்சம்பவம் குறித்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்திருந்தது. தாக்குதலுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சங்கங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. இதை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய, "முதல் பெஞ்ச்' போலீஸ் கருத்தை கேட்காமல், "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறியது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், சந்துரு அடங்கிய "பெஞ்ச்' நடத்தும் என உத்தரவிட்டது. சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த நீதிபதி முகோபாதயா, நேற்று ஐகோர்ட்டுக்கு வந்தார்.


நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், சந்துரு அடங்கிய "பெஞ்ச்' முன், நேற்று இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு வந்தன. சீனியர் வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமானுஜன், சோமயாஜு, வக்கீல்கள் வைகை, பிரபாகரன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா ஆஜராகினர்.மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை, "பெஞ்ச்' நேற்று மாலை பிறப்பித்தது.


உத்தரவில் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்ட சிலரை கைது செய்ய, ஐகோர்ட் வளாகத்துக்குள் யார் உத்தரவின்படி போலீசார் நுழைந்தனர். யார் உத்தரவின்படி தடியடி நடத்தப்பட்டது என்பதற்கு போலீஸ் கமிஷனர், அப்போதைய வடசென்னை இணை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த மாதம் 21ம் தேதி உத்தரவிட்டோம். போலீஸ் அதிகாரிகளின் பெயர், பதவி ஆகியவற்றை அறிக்கையில் குறிப்பிட வேண்டுமென உத்தரவிட்டிருந்தோம். அந்த அறிக்கையைப் பெற்ற பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தோம். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டியை கடந்த மாதம் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், "ஐகோர்ட் அல்லது விசாரணை கமிஷனர் யாரை குறிப்பிட்டாலும், அதை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம்' என தெரிவிக்கப் பட்டது. ஐகோர்ட் உத்தரவிட்டும், சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதம் அளித்தும், இதுவரை தமிழக அரசு எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. போலீஸ் கமிஷனர் அளித்த அறிக்கையை பிற்பகலில் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த போலீஸ் கமிஷனரின் மனுவில் தான், சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிடவில்லை.


கடந்த மாதம் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் போது, "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கலவரம் போன்ற சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த ஆயுதப்படை போலீசார் விரும்பினால், தற்காலிக தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். ஐகோர்ட் வளாகத்துக்குள் நுழைவதற்கு முன், அந்த சூழ்நிலை பற்றி தற்காலிக தலைமை நீதிபதிக்கு தெரிவித்திருக்க வேண்டும்' எனக் கூறியுள்ளது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தும், அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆரம்ப முகாந்திரம் உள்ளது. கூடுதல் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், வடசென்னை முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இவர்களின் நேரடி மேற்பார்வையில் தான் அந்த செயல்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட வக்கீல்களுக்கு உரிமையில்லை. உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்று, பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு "பெஞ்ச்' உத்தரவிட்டது.

நன்றி: தினமலர்

ஒரு சந்தேகம்: இன்று ஏதோ (லாயர்களின்) வெற்றிப் பேரணியாமே, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துல ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியதற்காக இருக்குமோ ? இவர்களின் நாட்டுப்பற்று போற்றுதலுக்குரியது !

Tuesday, March 03, 2009

531. ஒரு சில வக்கீல்களின் வன்முறைதான் காரணம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றச்சாட்டு

ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்துக்கு
ஒரு சில வக்கீல்களின் வன்முறைதான் காரணம்
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றச்சாட்டு



சென்னை, மார்ச்.3-


சென்னை ஐகோர்ட்டு சம்பவம் ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் உருவானது என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

அனைவரும் சமம்

சென்னை ஐகோர்ட்டில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் மீது ஊடகங்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவது எங்களுக்கு வேதனையளிக்கிறது. இந்த விஷயத்தில், நீதிக்கான அடிப்படை கோட்பாடுகளுக்கும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற நியதிக்கும் ஆபத்து வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு சில வக்கீல்களின் வன்முறையால்தான் ஐகோர்ட்டில் மோதல் சம்பவம் நடந்துள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வக்கீல்களை போலீசார் சட்டப்படி கைது செய்ய வந்தபோது சில வக்கீல்கள் எதிர்த்தனர். மேலும் அவர்கள், போலீசார் தங்களது கடமையை செய்யவிடாமல் தடுத்தனர்.

தரக்குறைவான பேச்சு

கடந்த 19-ந் தேதி அன்று பிற்பகல் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களும், வக்கீல்கள் என்ற போர்வையில் சிலரும் சட்டவிரோதமாக கூடி போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் அவர்கள் மீது செங்கல், கற்களை வீசி எறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

வக்கீல்கள் சட்டவிரோதமாக கூடி இதுபோன்ற வன்முறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் கண் எதிரே வன்முறைக் கும்பல் ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தியுள்ளது. இந்த கும்பலால் ஏராளமான போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் படுகாயமடைந்தனர். பெண் போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார்கள். ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள பொதுச்சொத்துகள் போலீசாரின் நடவடிக்கையால் சேதமடையவில்லை. மாறாக வக்கீல்களின் வன்முறை செயல்களால்தான் பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டன என்பதற்கு தேவையான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் உள்ளன.

அத்துமீறலை ஆதரிக்கவில்லை

கோர்ட்டு வளாகத்திற்குள் போலீசார் செல்லக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படவில்லை. அதற்கு மாறாக, சட்டத்தை நிலை நிறுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும், பொதுசொத்துகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்கவும் தேவைப்பட்டால் கோர்ட்டு வளாகத்திற்கு போலீசார் செல்லலாம் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதற்காக போலீசார் அத்துமீறியிருந்தால் அதனையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இதில் போலீசாரின் நடவடிக்கையை மட்டுமே ஒருதலைப்பட்சமாக பெரிதுபடுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டை மதிக்கவில்லை

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வக்கீல்கள் மட்டும் சுதந்திரமாக பேசியும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் ஒருதலைப்பட்சமான செய்திகள் மட்டும் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், போலீசார் இதுபோல சுதந்திரமாக போராட்டம் நடத்தி தங்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறுவதற்கு நன்னடத்தை விதிகளில் இடமில்லை.

இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வக்கீல்கள் இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கோர்ட்டுகளைப் போலவே, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். எனவே, ஐகோர்ட்டு சம்பவத்தில் இருதரப்பினருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்ட போலீசார் காப்பாற்றப்பட வேண்டும். இந்த சம்பவத்தில், போலீசார் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த சட்ட உதவியும், போதுமான நிதியும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

ஒப்புதல்

இந்த தீர்மான நகலில், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பி.ராம்மோகன் ராவ், எஸ்.ராமசுந்தரம், டி.வி.சோமநாதன், டி.என்.ராமநாதன், பி.சிவசங்கரன், எஸ்.தங்கசுவாமி உள்பட ஏராளமானோர் கையெழுத்துப் போட்டுள்ளனர். மேலும், பி.அமுதா, ராகேஷ் காக்கர், கே.ராமலிங்கம், எம்.எஸ்.சண்முகம் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானங்களுக்கு இ-மெயில் மூலம் ஒப்புதல் அளித்துள்ளனர். .

நன்றி: தினத்தந்தி

டெயில் பீஸ்: படிச்சவங்க படிச்சவங்க தான் என்று நிரூபித்து விட்டார்கள். தெளிவாக சிந்தித்துப் பேசி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார்கள் !!!

Monday, March 02, 2009

530. வக்கீல்-போலீஸ் மோதலும், வரிப்பண விரயமும்

ஹைகோர்ட் வளாகத்தில் நடந்ததை அந்த ஆர்டரிலேயே கூறுகிறேன்.  சு.சுவாமிக்கு உதையும், முட்டையடியும் வழங்கப்பட்டதும், உயர்நீதி மன்ற நீதிபதிகள் அதற்குக் காரணமானவரை கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட்டதும்,  போலீஸ் வக்கீல்கள் சிலரை கைது செய்ய முயன்றபோது நடந்த கைகலப்பும்,  அதன் தொடர்ச்சியாக நடந்த பரஸ்பர கல்வீச்சும், காவல் நிலையத்தை வக்கீல்கள் எரித்ததும், வன்முறை வலுத்ததும், போலீஸ் தடியடி நடத்தியதும், சில  வாகனங்களும் நொறுங்கியதும் நாம் அறிந்தது தான்!!

மேலே நடந்ததற்கும் பொது மக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.  ஒரு தனிமனிதரைத் தாக்கியதிலிருந்து தொடங்கிய பிரச்சினை இது.  யார் மீது, எவ்வளவு சதவிகிதம் தவறு என்று ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல! 

சில பாயிண்டுகள் மட்டும்:


1.  கோர்ட் வளாகத்தில் நடந்த வன்முறையில் காயமடைந்த போலீசார், அரசு மருத்துவமனைகளிலும், வக்கீல்கள் அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், வக்கீல்கள் போலீஸ் என்று யார் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று  அரசு கூறியுள்ளதாக செய்தி வந்துள்ளது.  இதற்கு முன் நடந்த வன்முறைகளில், அப்பாவிப் பொதுமக்கள் அடிபட்டபோது, அவர்களின் தனியார் மருத்துவமனை சிகிச்சைச் செலவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா ?

2. வன்முறையன்று, உடைந்த/சேதமடைந்த வாகனங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என்றும் தெரிகிறது!  இது தவிர, ஹைகோர்ட் வளாகச் சீரமைப்புப் பணியையும் அரசு தான் மேற்கொள்ள வேண்டும்!

3. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, கிட்டத்தட்ட 45(!) பேர் கொண்ட குழு இதில் ஈடுபட்டுள்ளது. விசாரணை முடிந்து ரிப்போர்ட் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.  இந்தக் குழுவில் forensic ஆட்களும் இருக்கின்றனர்!  இதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியவில்லை.

4. சி.பி.ஐ விசாரணை போதாதென்று, ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷனை, சுப்ரீம் கோர்ட் நியமித்து உள்ளது.  அவரும் சென்னை வந்து விசாரணையில் இறங்கியுள்ளார். அவர் உள்துறை செயலரிடமும், போலீஸ் கமிஷனரிடமும் விசாரனை நடத்தியுள்ளார்.

அரசு, நீதித்துறை சார்ந்த பலரின் நேர விரயம் ஒரு புறம் இருக்கட்டும்.  ஒரு அனாவசியப் பிரச்சினையால் விளைந்த வன்முறையின் தொடர்ச்சியாக, பொதுமக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுகிறதே என்பது என்னைப் போன்ற பொதுமக்களின் ஆதங்கம் :-(

இந்த விசயம் ஒரு சாம்பிள் தான்.  இது போல, பல உள்ளன.  இது போன்ற கொடுமையை சுட்டவே,   இந்த பாயிண்டுகளை எழுப்பினேன்!   2 வேளை ஒழுங்காக சாப்பிட முடியாத ஏழைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் இந்த நாட்டில் ? 

எ.அ.பாலா

Saturday, February 28, 2009

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?


எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன்.

அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து. அப்பருவத்தில், ஒரு பிரச்சினையை அணுகும் கணேஷின் திறமையும், வசந்த்தின் சுட்டித்தனமும், ஜொள்ளும் உடனடியாக ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணியது. கமல், ரஜினி என்று நடிகர்களுக்கு, அவர்கள் படங்களைப் பார்த்து தீவிர ரசிகர்கள் அமைகிறார்கள். ஆனால், சுஜாதா ஆணா/பெண்ணா என்று கூடத் தெரியாமல், அவரது தனித்துவமான எழுத்து என்ற அடையாளத்தின் பேரில் மட்டும், தீவிர ரசிகராகி, அவரை வாத்தியாராக ஏற்றுக் கொண்ட அக்கால இளைஞர் அனேகர். அடியேனும் அந்த கூட்டத்தில் ஒருவன்.

"பிரிவோம் சந்திப்போம்" ஏற்படுத்திய தாக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் மகளுக்கு மதுமிதா என்று பெயரிட்டேன் :)

அந்த subtle (உறுத்தாத) ஹியூமர் அவர் எழுத்துகளில் (அது கதையோ/கட்டுரையோ) விரவி இருக்கும். Non technical ஆசாமிகளுக்குக் கூட புரியும்படியாக, அதே சமயம் சுவாரசியமாக நவீன டெக்னிகல் சமாச்சாரங்களைக் கூட, ஒரு கதை சொல்வது போல சொல்ல ஒரு ஆள் பிறந்து வர, பலப்பல ஆண்டுகள் ஆகலாம்.

இங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை. அது போல, டெக்னிகல் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. வாத்தியார் போல எஞ்சினிய்ராக, விரிந்த வாசிப்போடு, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டிலும் மிக்க புலமையோடு, மிக்க தன்னடகத்துடன் ஒரு ஆசாமி சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை :(

இந்த வருட புத்தக கண்காட்சியில், உயிர்மையில் அவரது "கண்ணீரில்லாமல்" என்ற சிறு கட்டுரைத் தொகுப்பை வாங்கினேன். என்ன அது "கண்ணிரீல்லாமல்" என்று பார்த்தால், வாத்தியார் யாப்பு, கர்னாடக/மேற்கித்திய சங்கீதம், ஐன்ஸ்டைன், இந்து மதம் ஆகிய சமாச்சாரங்களை நாம் ரொம்பவும் அழாமல் தன்னிடமிருந்து தெரிந்து கொள்ள அழைக்கிறார் என்று விளங்கியது :) நிஜமாகவே, யாப்பிலக்கணத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது, ஒரே வாசிப்பில், மனதில் நிற்கும் வண்ணம்!

அதான் வாத்தியார் எழுத்தின் சக்தி. யாப்பு சொல்லித் தரும்போது கூட அந்த நகைச்சுவை இருக்கிறதே, "தமிழ் பண்டிதர்களிடம் போகாதீர்கள். "எட்டடி தரவு கொச்சக் கலிப்பா" போன்ற சொற்கள் எல்லாம் கனவில் வந்து பயமுறுத்தும்" என்பார்! யாப்பு பற்றி இதை விட எளிமையாக யாரும் விளக்க முடியாது.

அது போல, 'ரத்தம் ஒரே நிறம்' நாவலில், முத்து என்ற நாவலின் கதாநாயகனுக்கும், மெக்கன்ஸி என்ற பரங்கியனுக்கும் நடக்கும் "கட்டிப்புடி" சண்டையை வர்ணிக்கும்போது, 'முத்து மேல் மெக்கன்ஸி.. மெக்கன்ஸி மேல் முத்து... நிலைமை சற்று குழப்பமாக இப்போது முத்துன்ஸியாக உருண்டார்கள்' என்பார் :)

இரண்டு பதிவுகளில் வாத்தியாரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தியிருக்கிறேன், அதாவது 200 ஆண்டுகள். சொல்லி 3 ஆண்டுகளுக்குள் அரங்கனைப் பார்க்க புறப்பட்டுப் போய் விட்டார். இல்லை, அவருக்கு மிகவும் பிடித்த திருமங்கையாழ்வாராகக் கூட இருக்கலாம்!

வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு வலைப்பதிவர்கள் எழுதிய அஞ்சலிப் பதிவுகளின் இணைப்புகள் இந்த எனது பதிவில் உள்ளன

சுஜாதா தன்னைப் பற்றி: என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

Monday, February 23, 2009

528. ஈழததமிழர் ஆதரவாக சென்னையில் நடந்த அமைதிப்பேரணி

நேற்று இனஒழிப்புக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு (இலங்கை அரசின் இன ஒழிப்பை எதிர்த்து)ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டேன். பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றாலும், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்தேன். 2 சிறு ஓட்டப் படங்களும் (வீடியோ) எடுத்தேன்.



ஃபாதர் ஜெகத் காஸ்பர் முன்னின்று நடத்திய பேரணி இது. War Memorial இல் தொடங்கிய நடைப்பேரணி ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் நிறைவடைந்தது. ஜெகத் காஸ்பர் சிறு உரை நிகழ்த்தினார். 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்.



முல்லைத்தீவு பகுதியில் 220000 தமிழர்கள் அவல நிலையில் தவிக்கையில், இலங்கை அரசு அங்கு 70000 பேர் இருப்பதாக பொய்ச் செய்தியை பரப்பி வருகிறது. வரும் வாரங்களில், போர் என்ற பெயரில், தமிழர்களை அழிப்பதற்கான சதியோ என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இருக்கிறது. எப்படியாயினும், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். புலிகளும், இலங்கை அரசும் பேச்சு வார்த்தை நடத்தியே ஆக வேண்டும், அப்பாவி தமிழர்களின் நல வாழ்வுக்காக. புலிகள், தாங்கள் தயார் என்று கூறியதாக ஒரு செய்தி இன்று பார்த்தேன்.




எந்த சாதி/மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், விடுதலைப்புலி ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுத்தவராக இருப்பினும், தனி ஈழத்தில் நம்பிக்கை வைத்திருந்தாலும் / இல்லாவிட்டாலும், இந்த சமயத்தில் பேராபத்தில் சிக்கியிருக்கும் , மிக்க அவல நிலையில் உழன்று கொண்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக, கொடுங்கோல் சிங்கள அரசுக்கு எதிராக, மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும்!

எ.அ.பாலா

Friday, February 20, 2009

527. திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!

ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, விகடனில் வந்துள்ள கட்டுரை இது. விகடனுக்கு நன்றி. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து யாராவது வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அராஜகம், இன்னும் பலருக்கும் தெரிய வரும்!
எ.அ.பாலா
**********************************************

மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!

மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில்,குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க,புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும்.

எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபாஷ்! இந்த இடத்துக்கு நீ நிச்சயம் வருவாய் என்றுதான் காத்திருக்கிறேன்' என்று பாசக் கயிற்றை வீசியதாம் மரணம்.

அந்த எமன் வீசியது பாசக் கயிறு. சிங்கள எமகாதகர்கள் வீசுவதற்குப் பெயர் பாதுகாப்பு வளையம். 'உயிருக்குப் பயந்தவர்கள் இங்கே வாருங்கள்' என்று அழைத்து, குண்டுபோட்டுக் கொல்கிறார்கள். அது பாதுகாப்பான மயானங்கள்!

எத்தனை தடவைதான் ஈழத்தின் சோகத்துக்கும் கொடூரத்துக்கும் வேறு வேறான வார்த்தைகளைத் தேட! வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்றன. கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அது தொடர்ந்து தொலைக்கத்தான் செய்யும்!

இப்போது ராணுவத்தின் இலக்கு புலிகள் அல்ல, அப்பாவித் தமிழர்கள். 'புலிகளை ஒழித்துவிட்டால், அடுத்து தமிழர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மொத்தமாக முடித்துவிட்டு, புலிகள் பக்கம் திரும்ப சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. 'அப்பாவிகளைக் கொல்லாதே!' என்று பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்ததும், அதை மறைப்பதற்கான தந்திரத்தை மகிந்தா அரசு யோசித்தது. அவர்கள் கண்டுபிடித்தது 'பாதுகாப்பு வளையம்' என்ற வார்த்தை.

பொதுவாக போர்கள் நடக்கும்போது, மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் 'பாதுகாப்பான இடங்கள்' என அறிவிக்கப்படும். அங்கு குண்டுகள் வீசக் கூடாது என்பது உலக நீதி. ஆனால், எல்லா அநீதிகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைப் 'பாது காப்பு வளையம்' என்கிறது.

'சில பகுதிகளைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளோம். அங்கு பொதுமக்கள் வந்துவிட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கெடு' என்று சிங்கள அரசு அறிவித்தது. அதாவது, மக்களை காட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி, கெடு விதித்தது. இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் கட்சி, 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்று சொல்லிப் பெருமைப்பட்டது. இப்படி ஒரு தகவல் அறிவிக்கப்பட்டதுமே அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர், 'தமிழர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என இலங்கையில் ஓர் அங்குலம்கூட இல்லையே? எங்கு வரச் சொல்கிறார்கள்?' என்று கிண்டலடித்தார்.

காட்டுக்குள் பல மாதங்களாக அடைந்துகிடக்கும் அப்பாவி மக்களில் சிலர், அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி, அந்தப் பாதுகாப்பான இடத்துக்கு வர, அங்கு போய் குண்டு போட்டுக் கதையை முடிக்கிறது சிங்கள அரசு.

இங்கு மக்கள் படும் சிரமங்கள் ஜெயவர்த்தனே காலத்தைவிடப் பல மடங்கு மோசமானது. ''எங்கள் மக்கள் முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். யாருக்கும் வீடு கிடையாது. குடிசை கிடையாது. வெறும் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை வைத்து மரங்களுக்கு மத்தியில் இருக்கும் அகலத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான நேரம் பதுங்கு குழிகளில்தான் எல்லாரும் இருக்கிறார்கள். காலைக் கடன்கள் கழிப்பது, சமையல் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பதுங்கு குழியில்தான். இரவு பகலாக குழிக்குள் உட்கார்ந்திருக்கும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. விமானம் வரும் சத்தம்
கேட்டால், அத்தனை பேரும் பூமிக்குக் கீழே புதைந்து கிடப்பார்கள். குண்டு விழுந்தால் அப்படியே சமாதி!''

முல்லைத் தீவு மாவட்டம், தேவிபுரம், வள்ளிபுனத்திலிருந்து இடம்பெயர்ந்து அதிகாலையில் மூன்று குடும்பங்கள் வந்து சேர்ந்தன. ஐந்து மணி இருக்கும். அந்த நேரம் பார்த்து அவர்கள் மீது குண்டுகள் விழுந்தன. 19 பேர் அந்த இடத்தில் செத்துப்போனார்கள். 61 பேர் பலத்த காயமடைந்து துள்ளத் துடிக்கக்
கிடந்தனர். காயம் அடைந்தவர்களை முல்லைத் தீவு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மதியம் ஒரு மணிக்கு அங்கும் விழுந்தது குண்டு. காயம்பட்டு வந்தவர்கள், அங்கேயே பிணமானார்கள். இது நடந்தது கடந்த 12-ம் தேதி.

அதற்கு முந்தைய நாள் தேவிகுளம் நோக்கி நள்ளிரவு 3.15 மணிக்கு நடந்து வந்துகொண்டு இருந்த 22 பேர் குண்டுவீச்சில் செத்தார்கள். இடம்பெயர்ந்து வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் கொட்டகைகள் மீதும் குண்டுகள் விழுகின்றன. காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது கடந்த 6-ம் தேதி விழுந்த குண்டுவீச்சில் 61 பேர் இறந்துபோனார்கள். 'ஆஸ்பத்திரிக்குப் போனா, சாவுதான்' என்பது தமிழகத்தில் ஜோக். ஈழத்தில் அதுதான் கடைசி ஷாக்!

மருத்துவமனைகளுக்கும் எந்த மருந்தையும் கடந்த ஆறு மாதமாக வரவிடவில்லை. வந்தவை அனைத்தும் காலியாகி, வெறும் பேண்டேஜ்கள் மட்டும் வைத்து, வாசலில் பாய் விரித்துப் படுக்கவைத்துவிடுகிறார்கள். வலியால் துடிப்பவர்களைப் பார்த்து டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைவதில்லை. அவர்களிடம் வேறு வழியும் இல்லை. முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை அங்கிருந்து வெளியேற கொழும்புவில் இருந்து உத்தரவு. இனி சும்மா படுக்கவைத்து கட்டுப் போடக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். இப்படி எல்லா மருத்துவமனைகளும் அறிவிக்கப்படாத சுடுகாடுகளாக மாறிவிட்டன.

மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கப்பல் மூலம் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்தது. முல்லைத் தீவு மாத்தளன் கடலில் இந்தக் கப்பலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்த கடற்படை அனுமதிக்கவில்லையாம். சுமார் 240 பேர் மட்டும் அவசர அவசரமாக கப்பலில் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் நொந்துபோய் அங்குள்ள மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதோடு செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

இன்னொரு பக்கம் பார்த்தால்....

உயிருடன் பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள் தனித் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் முதியோர்கள், குழந்தைகள் வேறு பக்கமும் இளைஞர்கள், இளம் பெண்கள் தனியாகவும் அனுப்பப்படுகிறார்கள். சோறு, தண்ணீர் இல்லாத இடங்களில் முதியோர்கள் அவஸ்தைப்பட... இளைஞர்கள், இளம் பெண்களுக்கான சித்ரவதை இன்னொரு புறம் ஆரம்பமாகிறது.

விசாரிக்கப்போவதாக ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வருவார்கள். ''இளைஞர்களை முடிந்த வரை கொடுமைப்படுத்திவிட்டுச் சுட்டுவிடுவது இவர்களின் வேலை. வேறு எதுவும் விசாரணை செய்வதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், கோரங்களின் உச்சம். இளம்பெண்களின் கண்களை முதலில் கட்டுவார்கள். கைகளைப் பின்புறம் சேர்த்துக் கட்டுவார்கள். அதன் பிறகு அவர்களின் ஆடைகளைக் கிழித்து அம்மணமாக்கிவிட்டு, உதைத்து ஓடவிடுகிறார்கள். எங்கு போகிறோம்... என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், பயத்தில் ஒரு பெண் ஓட, வாய்ப்பான வசதியான இடங்களில் சிங்கள மிருகங்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும். எத்தனையோ பேர் அவள் மீது விழுந்து புரண்ட பிறகு, அவள் உறுப்புகளைச் சிதைத்து சுட்டுக் கொன்றுவிடுவதுதான் அங்கு நடக்கிறது'' என்று சொல்லப்படும் தகவல்களைக் கேட்கவே நெஞ்சு நடுங்குகிறது.

அனுராதபுரம், பொலநறுவை மயானங்கள், அதை ஒட்டிய காட்டுப் பகுதிகள், வவுனியாவின் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில்தான் இந்தக் கொடூரக் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றனவாம். அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன சிங்களத் தொழிலாளர்கள், தங்கள் பகுதிகளில் பல பெண்களின் பிணங்கள் நிர்வாணமாகக் கிடந்ததாக வெளியில் சொன்னார்கள். வன்னியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள வவுனியாவுக்கு அடைக்கலம் புகும் மக்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் இப்போதைய ஈழமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

புலிகள் வசம் இருக்கும் புதுக் குடியிருப்பையும், அதைத் தாண்டிய முல்லைத் தீவையும் கைப்பற்றி ஏக இலங்கையை பிப்ரவரி முதல் நாள் விடுதலை செய்யப்போவதாக அறிவித்த மகிந்தா ராஜபக்ஷே அரசு, இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்களைக் கொல்வதில் அக்கறையுடன் இயங்கி வருகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு, 'தமிழர்கள் யாரையும் விடக் கூடாது' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குக் காத்திருந்தது மாதிரி, கோத்தபய ராஜபக்ஷே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

''புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா, இல்லையா என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. புலிகள் தங்கள் வசமிருந்த மக்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். எனவே, அனைவரும்
புலிகள்தான். ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் இறந்த மாவீரராகவோ அல்லது இப்போது அமைப்பில் இருக்கும் போராளியாகவோ உள்ளார்கள். எனவே, எந்தக் குடும்பமும் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது. மருத்துவமனைகளைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள். அதுவும் எங்களின் ராணுவ இலக்குதான்'' என்று தெளிவாக அறிவித்துவிட்டார் கோத்தபய ராஜபக்ஷே.

''இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நித்தமும் இந்த தாக்குதலைத் தொடர சிங்கள
தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புறம் மயானக் கரைக்கு வெள்ளையடித்து ரிப்பன் கட் பண்ணப்போகிறதா ஐ.நா.சபையும் உலக சமுதாயமும்?'' என்று ஈழ மக்கள் கதறுகிறார்கள்.

அது பற்றி நமக்கென்ன கவலை?

நமக்கு இலங்கையை கிரிக்கெட்டில் ஜெயித்தது போதும்தானே!.

Thursday, February 19, 2009

526. நீதிக்குத் தலைகுனிவு - தினமணி தலையங்கம்

கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, இங்கே நடப்பது மக்களாட்சிதானா, இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

எந்தவொரு மனிதனுக்கும் தனது கருத்துகளை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொருத்த விஷயம்.

உயர் நீதிமன்றத்தில் நடந்தேறிய சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் மூன்று. நீதிபதிகளின் முன்னால், நீதிமன்ற அறையில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மனநிலையுடையவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்பது முதலாவது அதிர்ச்சி. கறுப்புச் சீருடை அணியாமல் முன்கூட்டியே திட்டமிட்டு, கையில் முட்டையுடன் நீதிமன்ற அறையில் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் வழக்கறிஞர்கள் என்பதைவிட கிரிமினல்கள் என்பது அல்லவா உண்மை! இது இரண்டாவது அதிர்ச்சி. மூன்றாவது, நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி சந்துரு இருவரும் இருக்கும்போது, அவர்கள் கண் முன்னால் இப்படியொரு அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றால், நீதிபதிகளுக்கு இந்த வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பது.

சமீபகாலமாகவே, சட்டப்படிப்பு படித்து விட்டதாலேயே சட்டத்தைத் தாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்கிற மனோபாவம் பல வழக்கறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், முருகானந்தம் என்கிற நீதிபதியை, நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது வேலை நிறுத்தத்தின்போது, பிராட்வே பகுதியில் ஒரு சைக்கிள் கடையை 24 வழக்கறிஞர்கள் சூறையாடியதும், அவர்களைக் கைது செய்யப்போன காவல்துறையினரையே அவர்கள் தாக்க முற்பட்டதும் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர்களின் அத்து மீறிய செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருப்பது, எந்த அளவுக்கு ஒரு கௌரவமான, மரியாதைக்குரிய தொழில் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. முன்பொருமுறை, அலாகாபாத் நீதிமன்றத்தில் காவல்துறையினரைப் பற்றி குறிப்பிடும்போது, "யூனிஃபாரத்தில் உலவும் ரௌடிகள்' என்று ஒரு நீதிபதி விமர்சித்தார். பிறகு அந்தக் கருத்து திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு விஷயம். இப்போது, அதே கருத்து வழக்கறிஞர்களுக்கும் பொருந்திவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறதே!

விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார் என்பதற்காக சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால், மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி விடுதலைப் புலிகளை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அல்லவா இவர்கள் தாக்கி இருக்க வேண்டும்? ஒருவேளை, அதற்கு தைரியமில்லாத காரணத்தால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கித் தங்களது வீரத்தைப் பறைசாற்ற நினைத்தார்களோ, என்னவோ!

எந்த அளவுக்குத் தரந்தாழ்ந்தவர்களாக இருந்திருந்தால், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய அந்த மூன்றாம்தர வழக்கறிஞர்கள் (அவர்களை வேறு எப்படித்தான் அழைப்பது?) தாங்கள் வழக்காடும் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்னால் முட்டைவீசித் தாக்குதல் நடத்தி இருப்பார்கள்? இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்களோ நானோ இதுபோல நடந்திருந்தால் அடுத்த வினாடியே, நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் நாம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருப்போம்.

எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. "சமரசம்' ஏற்பட்டு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதேபோல, வழக்கறிஞர்களின் சட்டவிரோதமான செயல்கள் பலதும் கண்டும் காணாமலும் நடவடிக்கை எடுக்கப்படாமலும் விடப்படுகின்றன. நடவடிக்கை எடுத்தால், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். அதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள், நீதிபதிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.

தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தலைமை நீதிபதியோ, நீதிபதிகளோ இவர்களை நீதிமன்ற அவமதிப்புக்காக, தண்டிப்பார்களா? இந்த வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமை ரத்து செய்யப்படாவிட்டால், நாங்கள் வழக்குகளை விசாரிப்பதில்லை என்று நீதிபதிகள் அறிவிப்பார்களா? சரி, பார் கவுன்சிலாவது, இதுபோன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, தொழிலில் இருந்து வெளியேற்றுமா? அரசாவது, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடருமா? எதுவுமே நடக்காது என்பதுதான் நிஜம்.

நீதி கேட்டு நாம் நீதிமன்றத்துக்கு ஏன் போகிறோம்? நீதிபதி நியாயம் வழங்குவார் என்பதால். அந்த நீதிபதிக்கே மரியாதை இல்லை என்றால், மக்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையும் தகர்ந்து விடுகிறதே!

சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அரங்கேற்றி இருக்கும் வன்முறை, அராஜகம், ஈழத்தமிழர்கள் மீதுள்ள அனுதாபத்தையும் குலைக்கும். மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும் குறைக்கும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றும் உரிமையை ரத்து செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்வதுதான், இனியும் இதுபோன்ற அநாகரிகம் தொடராமல் தடுக்கவும், நீதிமன்றத்தின் கண்ணியம் காப்பாற்றப்படவும் ஒரே வழி.

நன்றி: தினமணி

Tuesday, February 17, 2009

525. சுப்பிரமணிய சுவாமியைத் தாக்கி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் அராஜகம்

இன்று, ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, அவரது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்கள், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அராஜகத்தில் ஈடுபடுவது, கடுமையான கண்டனத்துக்குரியது. சமூகத்தில், சட்டத்தை மதித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய வழக்கறிஞர்கள், பொது மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் மரியாதையை குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டுள்ளனர்.

பொதுவாகவே, இவர்களின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் சிலாக்கியமாக இல்லை. எதற்கெடுத்தாலும், வேலை நிறுத்தம், நீதிபதிகளையே கேரோ செய்தல் என்று பலவற்றைக் கூறலாம். அரசியல் கட்சிகளை சார்ந்து பல வழக்கறிஞர்கள் செயல்படுவதே இதற்கு முக்கியக் காரணம். வழக்கறிஞர் தொழில் என்பது அரசியல் சாரா தொழிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

சு.சுவாமியின் ஈழப்பிரச்சினை குறித்த கருத்துகள் எனக்கும் ஏற்புடையதல்ல. சில சமயங்களில் உளறுகிறார் என்று கூட சொல்லலாம். அதற்காக, அவர் மீது வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கருத்துரிமையை மதிக்காத இந்த போக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் :-(


செய்தி கீழே:

எ.அ.பாலா

***************************
சென்னை, பிப் 17 (டிஎன்எஸ்) சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதா தள கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள், இலங்கை தமிழருக்கு எதிராக பேசுவதால் சுப்பிரமணிய சுவாமியை தாக்கியதாக அவர்கள் கோஷமிட்டனர். தங்கள் கண் முன்னிலையிலேயே தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது. இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.

இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.

இந்த நிலையில் அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு கோருவதற்காக டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சில வழக்கறிஞர்கள், சுப்பிரமணியம் சுவாமியின் இலங்கை கருத்துக்களை ஆட்சேபித்து குரல் எழுப்பியவண்ணம் அவர் மீது அழுகிய முட்டைகளை வீசினார்கள்.

தங்கள் முன்பாகவே இந்த சம்பவம் நடைபெற்றதை கண்டித்த நீதிபதிகள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

அவரைப் பார்த்த, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் சிலர் ஆவேசமாக ஓடி வந்தனர்.

சுப்பிரமணியம் சுவாமியை காவல் துறையினர் பாதுகாப்பாக அவரது கார்வரை அழைத்து சென்று விட்டார்கள். (டிஎன்எஸ்)
******************************************

நன்றி: Chennaionline.com

Tuesday, February 10, 2009

524. பெண் புலி நடத்திய தற்கொலை படை தாக்குதல்

ஈழத்தமிழர் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்திற்கு வந்து, போர் நிறுத்தத்திற்கு இலங்கைக்கு பல தரப்பிலிருந்தும் நெருக்கடி தரப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், புலிகள் இப்படியொரு தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டாம். எது எப்படியிருப்பினும், இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. போரைத் தொடர இலங்கை அரசுக்கும், சிங்கள வெறியர்களுக்கும் ஒரு காரணம் கிடைத்து விட்டது. மேலும், அப்பாவித் தமிழர்கள் பலியாவார்கள் :-(

எ.அ.பாலா
***************************************

பிற்சேர்க்கை:

என்னை ஆபாசமாகத் திட்டி இப்பதிவை நீக்கும்படி ஒரு பின்னூட்டம் வந்தது. ஐபி முகவரியை பத்திரமாக வைத்திருக்கிறேன்!

பிரச்சினை என்னைத் திட்டியது பற்றி அல்ல! நான் சொல்ல வந்ததின் நோக்கம் புரியாமல், நான் என்னவோ சிங்கள அரசு செய்ததற்கு/செய்து வருவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் எழுதியிருப்பதாக சிலருக்குத் தோணலாம்! நிச்சயம் உண்மை அதுவல்ல! இலங்கை அரசை ஆதரிப்பதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் கிடையாது!

முதலில் இருந்தே, ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் அக்கறையின்மை குறித்தும், போர் நிறுத்தத்தின் அவசியம் குறித்தும் நான் தொடர்ந்து எழுதி வருவதை என் வலைப்பதிவை வாசிக்கும் நண்பர்களும், டிவிட்டர் (twitter.com) நண்பர்களும் அறிவார்கள். சிங்கள ராணுவத்தின் வெறி அப்பாவி தமிழ் மக்கள் மேல் தீவிரமாகத் திரும்புமே என்ற ஆதங்கத்தில் தான் நான் எழுதியது. சிலர் திரிக்க முனைகிறார்கள் :-(

டமில்நெட் தளத்தில், Reports from Vanni indicate that the civilian casualties at the military checkpost claimed as 'IDP rescue centre' by the Sri Lanka Army (SLA) was in fact due to gunfire at the civilians by the SLA after a bomb blast, according to civilians who escaped the scene back to LTTE territory என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சிவிலியன் உயிரிழப்புக்கு சிங்கள ராணுவமே காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.

புலிகளால் பட்ட பாட்டை விட, இலங்கை அரசால், ஈழத்தமிழர்கள் பல காலமாக பல இன்னல்களைச் சந்தித்துள்ளனர் என்பதே என் கருத்து. போர்/வன்முறை நிரந்தரத் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. பேச்சுவார்த்தை மூலமே, தீர்வு காண முடியும். இந்தியா தலையிட விரும்பாத நிலையில், அமெரிக்கா/பிரிட்டன்/கனடா உருப்படியாக ஏதாவது செய்ய முன் வந்தால் மகிழ்ச்சியே.

எ.அ.பாலா

***********************************************
கொழும்பு: இலங்கையில் பெண் விடுதலைப் புலி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் 20 பேர் உட்பட 28 பேர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இப்படி சண்டை நடக்கும் பகுதியில் இருந்து பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கடந்த சில நாட்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறி வருபவர்களை விசாரித்து, பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக, ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வமடு அருகே சுந்தராபுரம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி வழியாக நேற்று பலர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்பாவி மக்களோடு ஊடுருவி வந்த பெண் விடுதலைப் புலி ஒருவர், சோதனைச் சாவடி அருகே வந்ததும், தன் உடலில் கட்டியிருந்த பயங்கர குண்டுகளை வெடிக்கச் செய்தார்.இதில், அதிகாரிகள் இருவர் உட்பட ராணுவத்தினர் 20 பேர் பலியாயினர்; அப்பாவி தமிழ் மக்கள் எட்டு பேர் இறந்தனர். இதுதவிர, 50 தமிழர்கள் காயமடைந்தனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.காலை 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. முல்லைத் தீவு அருகே போர் முனையில், கடந்த சில நாட்களாக இதுபோன்ற தாக்குதல்களை நடத்த புலிகள் பலமுறை முற்பட்டனர்.இருந்தாலும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று அவர்கள் தங்களின் தாக்குதலை நடத்தி விட்டனர். இந்த மாதத்தில் புலிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் தொடர்பாக முதல் கட்டமாக கிடைத்த தகவல்களில் 28 பேர் இறந்ததாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறப்பு மற்றும் காயமடைந் தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது.தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததும், அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். மருத்துவக் குழுவினரும் அங்கு விரைந்தனர். காயமடைந்த பலர் கிளிநொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.கடந்த 4ம் தேதி யானையிறவு அருகே சாலை என்ற இடத்தில், 13 வயது சிறுமி மூலம் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த புலிகள் திட்டமிட்டனர்; ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் மக்களை நாங்கள் காப்பாற்ற முற்படுகிறோம். ஆனால், புலிகள் அதைச் செய்ய விடுவதில்லை. அப்பாவி மக்கள் மத்தியில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி அவர்களைக் கொன்றுள்ளனர். இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகளின் "கரும் புலிகள்' தான் பயன் படுத்தப்பட்டு வருகின்றனர்' என, இலங்கை மீடியாத் துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யபா கூறினார்.

நன்றி: தினமலர்

Monday, February 09, 2009

523. ஒரு ஆடு ஒரு காக்கை

இடத்தைக் கொடுத்தால்


மடத்தைப் பிடிப்பது இது தானா? ;-)

Sunday, February 08, 2009

522. கலைஞர் டிவி வாழ்க!

சேனல் சர்ஃபிங்க்கு நடுவில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் 4-5 நிமிடம் நின்றேன்.. ஒரு போட்டிக் குழு சிறப்பாக பரதநாட்டியத்தில் சிவநடனம் ஆடி முடித்த பின் அது பற்றி நடுவர்கள் பேச ஆரம்பித்தனர்..

நடுவர்களில் ஒருவரான ரம்பா சிவ நடனங்களின் வகைகள் பற்றிச் சொல்ல ஆரம்பிக்க, கலா மாஸ்டர் ஓ உங்களுக்கு மந்திரம் எல்லாம் தெரியுமா என்று கேட்க, ரம்பா கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, ஆனால் நான் சிவ பக்தை என்றார்.. உடனே கலா மாஸ்டர் நீங்கள் கூறி வழிபடும் மந்திரம் ஒன்றை எங்களுக்காக சொல்லித் தான் ஆகவேண்டும் என்று ரொம்பவே வற்புறுத்தினார்..

உடனே, ரம்பா தன் இருக்கையிலேயே கண்களை மூடி, கைகளைக் குவித்து இதழில் தவழந்த மந்தஹாசம் மறையாமல், சொல்ல ஆரம்பித்தார்.. "சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதிபி:" என்ற சௌந்தர்ய லஹரி சுலோகத்தை பக்தி பாவத்துடனும், சில உச்சரிப்புப் பிழைகளுடனும் சொன்னார்..

அதற்குப் பிறகு 28 சிவ தத்துவங்களைக் கூறும் மந்திரம் ஒன்றையும் சொல்லி முடித்தார். பிறகு சில நொடிகள் கழித்து கண் திறந்தார்.

கலா மாஸ்டர் கரகோஷம் செய்தார். பார்வையாளர்கள் அதில் இணைந்தனர். நல்ல கடவுள் பக்தி இருக்கும்மா உனக்கு, ரொம்ப நல்ல விஷயம் என்று கலா மாஸ்டர் ஆசிர்வதித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இப்படி ஒரு சம்பவம், நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது.

தங்கள் இந்துத் தன்மையை எந்தக் தயக்கமும் இல்லாமல் பிரபலங்கள் வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி வந்தது .... கலைஞர் டிவியில்! வாழ்க!

Saturday, February 07, 2009

ஈழமும் துரோகமும் - கி.அ.அ.அனானி


கி அ அ அனானியிடமிருந்து ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு மேட்டர் மெயிலில் வந்தது, அவர் ஸ்டைலில் "துரோகம்" மற்றும் "பிராப்பர்டி ரைட்" குறித்து ஒரு விளாசல். எப்போதும் போல் கொஞ்சம் எடிட் பண்ண வேண்டியிருந்தது, ஆனால் சூடு குறையாத வகையில் :) மேட்டரைப் பதிந்ததற்கான காரணம், பழசு தான், அதாவது கருத்துச் சுதந்திரம் !!! கி அ அ அ மேட்டர் கீழே, வாசிக்கவும்.
எ.அ.பாலா
************************************************

இலங்கையில் போரும் படுகொலைகளும் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் வேளையில் நடந்த / நடக்கும் துரோகங்களெல்லாம் போதாதென்று, நடந்ததையெல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் முதல்வர். பாவம்.. அவரும் என்ன செய்வார் , சுமார் 50 வருடங்களாக நடப்பது போல் "நெருப்பு பற்றி எரியும் பின் தானாக அடங்கி நீறு பூத்து விடும். பின் தனக்குத் தேவையான போது ஊதிப் பெரிதாக்கிக் கொள்ளலாம்" என்று எப்போதும் போல் கனவு கண்டு கொண்டிருந்தவரின் கனவில் மண்ணைப் போடும் படியாக தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்று அவரது ஆதரவாளர்களே வெறுத்துப் போகும் படியான அறிக்கைகளையும் ,அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றுவதில் முனைந்துவிட்டார்.

இதன் உச்ச கட்டம்தான் முதல் எதிரியாகக் கருதியவரையும், துரோகி, முதுகில் குத்தியவன், தமிழன் இல்லை என்று இருந்த மட்டும் வாய்க் கொழுப்போடு வசை பாடிவிட்டு இன்று வாய் கூசாமல் "எனது நண்பர் எம் ஜி ஆர் " என்று சொந்தம் கொண்டாடுவதும், தங்களது முயற்சியாலே தான் ஐநாவும் ,அமெரிக்காவும், இங்கிலாந்தும் ,ஜப்பானும் அறிக்கைகள் விட்டு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றன என்று எழுதுவதும்.

இப்படி அடுத்தவர் செய்ததை எல்லாம் , ஏதோ தன்னால் தான் நடந்தது என்று இவர் சொல்வது புதிதல்ல என்றாலும், தனது இன மக்களுக்காக உலகில் பல்வேறு நாடுகளில் உழைத்து வரும், ஆதரவு திரட்டும், போராட்டம் நடத்தும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் முயற்சிகளை, சரியோ தவறோ இதற்காக தன்னுயிரைத் தந்த முத்துக்குமார் போன்ற இளைஞர்களது அளவிட முடியாத தியாகங்களை, இதை விட கேவலமாக களவாடவும், கொச்சைப் படுத்தவும் முடியுமா என்பது சந்தேகமே.

அடுத்து ஆட்சியைத் துறக்க வேண்டாம் என்று இலங்கைத் தமிழர்களே கடிதம் மூலம் சொன்னார்களாம்!!! அதனால்தான் ஆட்சித் துணியை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறாராம். முதலில் இவரை ஆட்சியை துறக்கத் தயார் என்று அறிக்கை விடச் சொல்லி யாராவது வற்புறுத்தினார்களா என்ன? ஆட்சியைத் துறக்கவும் தயார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வெற்றுச் சவடால் அடிக்கிறீர்களே , இன்னும் ஒரு புல்லையும் பிடுங்கவில்லையே என்றுதான் கேட்கிறார்கள், அதற்காக "உருப்படியான" முன் முயற்சி ஏதேனும் எடுக்கப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவது ஞாயம் தானே?

அடுத்ததாய் இந்த மத்திய அரசின் பதவிக் காலம் முடிந்து, அடுத்த தேர்தலும் முடிந்த பின், இவர் மத்தியில் பதவியைப் பகிர்ந்தோ அல்லது எதிர்க் கட்சியாகவோ விடப் போகும் அறிக்கைகளுக்காக இளிச்சவாய்த் தமிழன் "கண்கள் பனிக்க, நெஞ்சம் இனிக்க" காத்துக் கொண்டு தான் இருக்கப் போகிறான். வேறென்ன செய்வான்? கழுதைக்கு வாக்கப் பட்டால்...என்ற பழமொழியச் சொன்னவனும் தமிழன்தானே.

இதில் கருணாநிதியைத் திட்ட, எங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, வேறு எவனுக்கும் உரிமை இல்லை என்று அவனவன் இணையத்தில் "ப்ராபர்டி ரைட்" கொண்டாடிக் கொண்டு நெஞ்சு விம்ம ஒப்பாரி வைக்கிறான்கள். அடுத்த லெவல் அடிப்பொடிகள் அதற்கு அமாம் ஆமாம் என்று பின்னூட்ட ஜால்ரா தட்டுகின்றன.

எவனுக்கும் ரைட் இல்லை என்று சொல்லும் "அவனுக்கு" இந்த இடத்தில் ஒரு வார்த்தை. "திட்டுறவன் எப்பவும் போல கன்ஸிஸ்டண்டா திட்டிக் கொண்டுதான் இருக்கிறான், நீ தான் முன்னாடி கண்னை மூடிக்கிட்டு ஜால்ரா அடித்துக் கொண்டு இருந்தாய். இப்போது காலத்தின் கட்டாயத்தினால் கொஞ்சம் "தெளிஞ்சு" திட்ட ஆரம்பித்து இருக்கிறாய். சுய மூளையோட சிந்திக்கிறவன் , ரெகுலரா திட்டுரவன் வேணுமுன்னா உன் மேல ப்ராபர்டி ரைட் கேஸ் போடலாம். என் வேலையை நீ ஏண்டா செய்கிறாய்" என்று.


இப்படி 'திட்ட உரிமை' கொண்டாடும் தொண்டரடிப் பொடிகளுக்கும், பரம்பரையாக பராமரிப்பதால் கோயில் தங்களுக்கு "மட்டுமே" சொந்தம் என்று "பிராப்பர்டி ரைட்" பேசும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லையே, அம்பலவாணா ? ;-)



கி அ அ அனானி

Tuesday, February 03, 2009

520. அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்

சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது.

திமுகவையும், காங்கிரஸையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அந்த சிலரின் சதி பலிக்காது. அதேபோல பந்த் நடத்தி அரசைக் கலைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.


நன்றி: தட்ஸ்டாமில்.காம்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails